தூத்துக்குடியில், வருகிற 30-ந் தேதிபுதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ்நிலையம் திறப்பு


தூத்துக்குடியில், வருகிற 30-ந் தேதிபுதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ்நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வருகிற 30-ந் தேதி புதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ்நிலையம் திறப்புவிழா நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு வருகிற 30-ந் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார். அன்று காலை 7 மணிக்கு அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மீளவிட்டானில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்கின்றனர்.

காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்டெம் பார்க் திறந்து வைக்கின்றனர். அதனை தொடர்ந்து 9 மணிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் புதிய பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் நடக்கிறது. இந்த விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

1 More update

Related Tags :
Next Story