வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது.

செங்கல்பட்டு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது நமது மாநிலம் மற்றும் நாட்டின் பெருமையை மீண்டும் நிரூபித்துள்ளது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பு. இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான மேலாண்மை செயல்திறன் முதல் கட்ட மதிப்பீடாக இந்தியாவில் உள்ள 39 பெரிய மற்றும் நடுத்தர உயிரியல் பூங்காக்களை ஆய்வு மதிப்பீடு செய்தது. இந்த ஆய்வு மதிப்பீட்டு முடிவுகள் புவனேஷ்வரில் நடைபெற்ற இயக்குனருக்கான தேசிய மாநாட்டில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவால் அறிவிக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெற்ற மதிப்பெண்கள் சூழலியல் மதிப்பெண் 77 சதவீதம், திட்டமிடல் மதிப்பெண் 85 சதவீதம், உள்ளீட்டு மதிப்பெண் 85 சதவீதம். செயல்முறை மதிப்பெண் 79 சதவீதம் வெளியீடு மதிப்பீடு 85 சதவீதம் மற்றும் விளைவு மதிப்பெண் 79 சதவீதம் என ஆறு கூறுகளின் கீழ் 16 தனித்தனி நிபுணர்கள் கொண்ட குழுவால் உயிரியல் பூங்காக்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அனைத்து 6 உறுப்புகளிலும் மிக நன்று என்று மதிப்பிடப்பட்டு மற்றும் 3 உறுப்புகளில் மற்ற உயிரியல் பூங்காக்களைவிட 85 சதவீதம் என்ற அதிகபட்ச மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெரிய வகை உயிரியல் பூங்காக்களில் 82 சதவீதம் மதிப்பெண்ணை பெற்று மிக நன்று என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் புதிய வரவாக சீதா என்ற இந்திய காட்டு மாடு கடந்த 7.9.2022 அன்று ஒரு ஆண் கன்று ஈன்றுள்ளது. நிலப்பறவைகளில் மிகபெரிய பறவையான நெருப்புக்கோழி 24.8.2022 அன்று 4 குஞ்சுகளை பொரித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவில் வேங்கை புலியின் மறு அறிமுகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இந்தியாவில் வேங்கை புலியை வரவேற்பதில் அதிக உற்சாகம் அடைந்தனர்.

இந்த தகவல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story