விளாத்திகுளம், முத்தலாபுரம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை


விளாத்திகுளம், முத்தலாபுரம் கோவிலில்  தேய்பிறை அஷ்டமி பூஜை
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:45 PM GMT)

விளாத்திகுளம், முத்தலாபுரம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், சீயக்காய், இளநீர், பச்சரிசி, தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூ, வில்வ இலை, வடை போன்றவற்றால் மாலை சாற்றி சிறப்பு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

இதேபோல் எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி சமேத பாவானீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், விபூதி உள்ளிட்ட 14 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூ மலர்கள், உளுந்து வடையில் மாலை சாற்றி பைரவாஷ்டமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.


Next Story