அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்குகாலிங்கராயன் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என பெயர் மாற்ற வேண்டும்;கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு காலிங்கராயன் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
பவானி
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு காலிங்கராயன் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
மரியாதை
காலிங்கராயன் வாய்க்கால் அர்ப்பணிப்பு தினத்தையொட்டி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கொ.ம.தே.க. சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ெகாங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி காலிங்கராயன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் துரைராஜா, மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, ஸ்ரீகுமார், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு காலிங்கராயன் வாய்க்காலில் மலர் தூவி, முளைப்பாரி விட்டனர்.
பெயர் மாற்ற வேண்டும்
இதைத்தொடா்ந்து கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பவானி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டம் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், காலிங்கராயன் மன்னருக்கு பெருமை சேர்க்கும் வகையில் காலிங்கராயன் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டு்ம்.
இவ்வாறு அவர் கூறினார்.