மாணவிகளுக்கான தடகள போட்டி நடந்தது


மாணவிகளுக்கான தடகள போட்டி நடந்தது
x

ஜோலார்பேட்டையில் மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் குடியரசு தின மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் தடகள போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி வரவேற்றார்.

தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா, ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம், தனியார் பள்ளிகளி கல்வி அலுவலர் தேன்மொழி உள்பட தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story