ஆத்தூர் வனச்சரகர் விசாரணை
ஏற்காட்டில் மரங்கள் வெட்டிய விவகாரத்தில் ஆத்தூர் வனச்சரகர் விசாரணை நடத்தினார்.
சேலம்
ஏற்காடு சேர்வராயன் வடக்கு வனசரக எல்லையில் காப்புக்காடு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டன. சாலை அமைப்பதற்காக இந்த மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில் மரங்கள் வெட்டியது தொடர்பாக விசாரணை நடத்த ஆத்தூர் கோட்ட வனச்சரகர் சுதாகரை நியமித்து மண்டல வன அலுவலர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து எதற்காக மரங்கள் வெட்டப்பட்டது? என்பது தொடர்பாக வனச்சரகர் சுதாகர் விசாரணை நடத்திவருகிறார்.
Related Tags :
Next Story