ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க உதவுவது போல் இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க உதவுவது போல் இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க உதவுவது போல் இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்

கோயம்புத்தூர்

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏ.டி.எம் மையங்களுக்கு சென்றார். ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏ.டி.எம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.



Next Story