ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி; ஊழியர் கைது


ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி; ஊழியர் கைது
x

கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர், பாம்புகோயில் சந்தை, முள்ளிகுளம் ஆகிய இடங்களில் தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பணம் வைக்கும் வேலையை அங்கு ஊழியராக பணியாற்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் சந்தன மாரியப்பன் (வயது 30) செய்து வந்தார்.

இந்நிலையில் தனியார் ஏ.டி.எம். மைய மேலாளர் ஜெயபிரகாஷ், ஏ.டி.எம். மையத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்த்தபோது, கடந்த 3 மாதங்களில் சந்தன மாரியப்பன் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மாரியப்பனை கைது செய்தனர்.


1 More update

Next Story