வாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிள் பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


வாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிள் பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

காட்டூர் தனியார் கம்பெனி அருகே வாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றன.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் என்.எச்.1 பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல்லா (வயது35). இவர் காட்டூர் கிராமத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டூர் தனியார் கம்பெனி அருகே செல்லும்போது திடீரென 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த முகமது அப்துல்லாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story