வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் மீது தாக்குதல்


வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் மீது தாக்குதல் மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ பெருமாள் மகன் சுபாஷ் சந்திர போஸ்(வயது 34). இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேர்ந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சரண்யா(30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் சரண்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு வளாகத்துக்கு வந்த சுபாஷ் சந்திரபோசை சரண்யா அவரது அண்ணன் சதீஷ், இவரது நண்பர் ஆகியோர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுபாஷ் சந்திரபோஸ் கொடுத்த புகாரின் பேரில் சரண்யா, சதீஷ் உள்பட 3 பேர் மீதும் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story