இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல் - 4 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல் - 4 பேர் கைது
x

மதுபோதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை,

சென்னை தியாகராயர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் திடீரென நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்கியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை தேடும் பணியையும் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது பாட்டில்களை வீசிய சம்பவத்தில் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில், காவலாளியுடன் தகராறு செய்தபடி, கற்கள், காலி மதுபாட்டில்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்திற்குள் வீசியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story