காதல் விவகாரத்தில் என்ஜினீயர் மீது தாக்குதல்
பர்கூர் அருகே காதல் விவகாரத்தில் என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர் அருகே காதல் விவகாரத்தில் என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
என்ஜினீயர்
பர்கூர் அருகே மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 23), என்ஜினீயரிங் பட்டதாரி. இவர், சரியான வேலை கிடைக்காததால் தந்தை நடத்திய இறைச்சி கடையை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் சந்தோஷ்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த பெண்ணின் முன்னாள் காதலன் காளிதாஸ் (26) என்பவர், அந்த பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
இந்தநிலையில் சந்தோஷ்குமார் இறைச்சி கடைக்கு வந்த காளிதாஸ், அவருடைய நண்பர்கள் மோனீஸ் (26) உள்ளிட்ட சிலர் வந்தனர். அவர்கள் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்தோஷ்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனீசை கைது செய்தனர். இதற்கிடையே சந்தோஷ்குமார் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.