விவசாயி மீது தாக்குதல்
ஏர்வாடி அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே மாவடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 53). விவசாயியான இவருக்கும், கொய்யா மாவடியைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் கண்ணன் (32), பால்துரை மகன் டார்வின் (32) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மாவடியில் உள்ள ஓட்டலில் தேவேந்திரன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த கண்ணன், டார்வின் ஆகிய 2 பேரும் சேர்ந்து தேவேந்திரனை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த தேவேந்திரன் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கண்ணன், டார்வின் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story