விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

பகண்டை கூட்டுரோடு அருகே விவசாயி மீது தாக்குதல் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ஆறுமுகம்(வயது 41) விவசாயி. சம்பவத்தன்று இவரது மனைவி ஆண்டாள் என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதை தட்டிக் கேட்ட ஆறுமுகத்தை பரமசிவம், இவரது மனைவி தேன்மொழி, தாய் சின்னபிள்ளை மற்றும் உறவினர் ராஜி ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 4 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story