கள்ளக்குறிச்சியில் போலீஸ் விசாரணைக்கு வந்த மாமனார் மீது தாக்குதல் மருமகன் கைது


கள்ளக்குறிச்சியில்  போலீஸ் விசாரணைக்கு வந்த மாமனார் மீது தாக்குதல்  மருமகன் கைது
x

கள்ளக்குறிச்சியில் போலீஸ் விசாரணைக்கு வந்த மாமனார் மீது தாக்கியதாக மருமகன் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகள் சுதா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கச்சிராயப்பாளையம் திடீர்குப்பத்தை சேர்ந்த ராமசாமி மகன் பெரியசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக, சுதா தனது குழந்தைகளுடன் திருப்பூர் சென்று கூலி வேலை செய்து வருகிறார். எனவே பெரியசாமி தன் மனைவி மீது கள்ளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்து உள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணைக்காக பிச்சைக்காரன், அவரது மனைவி மற்றும் மகள் சுதா, சுதாவின் குழந்தைகள் 3 பேர் ஆகியோர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே வந்து நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பெரியசாமி தன் மாமனார் பிச்சைக்காரனை கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியசாமியை கைது செய்தனர்.


Next Story