மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்
மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணக்கப்பிள்ளை மகன் மகேந்திரன் (வயது 33). மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மாலை மகேந்திரன் தனது வீட்டின் முன்பு கட்டிலில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனி, மணிகண்டன், பன்னீர், சத்யராஜ், ராஜேஷ் ஆகிய 5 பேரும் முன்விரோத காரணமாக மகேந்திரனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மகேந்திரன் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story