மேஸ்திரி மீது விறகு கட்டையால் தாக்குதல்


மேஸ்திரி மீது விறகு கட்டையால் தாக்குதல்
x

மேஸ்திரி மீது விறகு கட்டையால் தாக்குதல்

திருவண்ணாமலை

மேஸ்திரி மீது விறகு கட்டையால் தாக்குதல்

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மணிகண்டன் (வயது 24). சென்னை அடையாறு சத்யா நகரில் கட்டிட மேஸ்திரியாக உள்ள இவரிடம் ஆத்துவாம்பாடி ஜோதி நகர கொல்லமேட்டில் வசிக்கும் பூங்காவனம் மகன் தங்கதுரை (36) என்பவர் வேலை பார்த்து வந்தார்

அப்போது மணிகண்டனிடம் தங்கதுரை ரூ 5 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். பின்னர் தங்கதுரை தனது ஊருக்கு வந்து பசுபதி என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இதனிடையே மணிகண்டன் கடந்த 4-ந் தேதி தனது ஊரில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, தங்கதுரையுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் மது அருந்தியதாக தெரிகிறது.

அப்போது தங்கதுரை, மணிகண்டனிடம் கொடுத்த பணத்தை கேட்பாயா? என தகராறு செய்து விறகு கட்டையால் அடித்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார், தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்து தங்கதுரை தாக்கியுள்ளார் என போளூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் தங்கதுரை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.


Next Story