பஞ்சாப் மாநில லாரி டிரைவர் மீது தாக்குதல்


பஞ்சாப் மாநில லாரி டிரைவர் மீது தாக்குதல்
x

சீர்காழி அருகே பஞ்சாப் மாநில லாரி டிரைவர் மீது தாக்குதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே எடமணல் ஊராட்சியில் வருஷபத்து கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து சீர்காழி புறவழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றி சென்ற டாரஸ் லாரியை எடமணல் பஸ் நிறுத்தம் அருகே வைத்து எடமணல் கிராமம் உச்சிமேடு வருஷபத்து மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் (வயது45), வடகால் கீழத்தெருவை சேர்ந்த நவநீதன்(32), விநாயககுடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரும் வழிமறித்து லாரி டிரைவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த களிவந்திர சிங் என்பவரை தாக்கி அவரது செல்போனை பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று லாரி டிரைவரிடம் தகராறு செய்து கொண்டிருந்த முருகன், நவநீதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story