அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது


அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2023 9:00 PM GMT (Updated: 24 Oct 2023 9:00 PM GMT)

தேவதானப்பட்டி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

பெரியகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மதுரையை சேர்ந்த பிச்சைகுமார் (வயது 30) பஸ்சை ஓட்டினார். பெரியகுளம் அருகே வத்தலக்குண்டு சாலையில் நல்லகருப்பன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது, தேவதானப்பட்டி வேல்நகரை சேர்ந்த திலீபன் (23) மோட்டார் சைக்கிளில் வந்து, அரசு பஸ்சை வழிமறித்தார்.

மேலும் பஸ்சுக்குள் ஏறிய திலீபன், டிரைவர் பிச்சைகுமாரிடம் ரகளை செய்தார். இதனை தட்டிக்கேட்ட பிச்சைகுமாரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் டிரைவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை கைது செய்தனர்.


Next Story