இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரால் மோதி தாக்குதல்


இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரால் மோதி தாக்குதல்
x

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தினக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெய்சங்கர்(வயது 39). இவர் தினக்குடியில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு நிலை வைப்பதற்கு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக அணைக்கரை படவா தலைப்பு சென்றுள்ளார். அப்போது ஜெய்சங்கருக்கும், தென்னவன் நல்லூர் கிராமத்தை சேர்ந்த சிவபாதம் மகன் பிரபாகரன் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெய்சங்கர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்ப தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோடாலி மாரியம்மன் கோவில் அருகில் வந்தபோது அவரை காரில் துரத்தி வந்த பிரபாகரன், ஜெய்சங்கரை மறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஜெய்சங்கரை, மீண்டும் துரத்திச் சென்று காரால் இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த ஜெய்சங்கர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். காரில் இருந்து பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் சுதாகர் ஆகியோர் இறங்கி ஜெய்சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாய் மற்றும் உருட்டுக்கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து ஜெய்சங்கர் தம்பி ஓடியுள்ளார். அப்போது பிரபாகர் மற்றும் சுதாகர் ஆகியோர் ஜெய்சங்கரை கொன்று விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர். இதில் காயமடைந்த ஜெய்சங்கர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து பிரபாகர் மற்றும் சுதாகர் ஆகியோரை தேடி வருகிறார்.


Next Story