மரம் வெட்ட சென்றவர் மீது தாக்குதல்

பரமக்குடி அருகே மரம் வெட்ட சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 43). இவர் மஞ்சக்கொல்லை பகுதியில் உள்ள புளிய மரத்தை ஒப்பந்தம் எடுத்து வெட்டச் சென்றுள்ளார். அப்போது மந்தி வலசை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (63) அவரது மகன்கள் உதயகுமார் (34) ஜெயகாந்த் (32) ஆகிய 3 பேரும் சேர்ந்து மரத்தை வெட்ட விடாமல் தடுத்து வீராச்சாமியை அவதூறாக பேசி தகராறு செய்தனர். மேலும் அவரை அரிவாளால் கையில் வெட்டியுள்ளனர். இதில் வீராசாமிக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வீராசாமி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். ஜெயகாந்த், சண்முகம் இருவரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






