தொழிலாளர்கள் மீது தாக்குதல்


தொழிலாளர்கள் மீது தாக்குதல்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் மீது தாக்குதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 42). இவர் திருத்தங்கல் பஸ் நிலையம் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து மற்றும் 2 பேர் தங்கள் மாடுகளை அழைத்து வந்து தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதனை செல்லப்பா தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தங்கமுத்து உள்ளிட்ட 3 பேரும், செல்லப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அதே தோட்டத்தில் வேலை செய்து வரும் தங்கராஜ் மனைவி ஜோதி (36) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்லப்பா திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தங்கமுத்து உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story