விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு..!


விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு..!
x
தினத்தந்தி 2 July 2023 11:11 PM IST (Updated: 3 July 2023 1:48 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் முக்தீஷ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் தனசேகர் (வயது 40). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கட்டளை கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கட்டளை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் தனசேகரை கடுமையாக தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் மோட்டோர் சைக்கிள் முற்றிலும் எரிந்துவிட்டது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story