கணவரின் கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல்
சுல்தான்பேட்டை அருகே கணவரின் கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே கணவரின் கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கள்ளக்காதல்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தார். இதற்காக அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
சீட்டு பணம்
இந்த விவகாரம், கள்ளக்காதலனின் மனைவிக்கு தெரியவந்தது. அவர், தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இது கள்ளக்காதலனின் மனைவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது கணவரின் கள்ளக்காதலிக்கு வழங்க வேண்டிய ரூ.10 ஆயிரம் சீட்டு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண்ணை ெதாடர்பு கொண்ட அவரது கள்ளக்காதலனின் மனைவி, தனது வீட்டுக்கு வந்து சீட்டு பணத்தை வாங்கி செல்ல கூறினார். இதை நம்பிய அந்த இளம்பெண், அங்கு சென்றார்.
தாக்குதல்
அப்போது தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு அந்த இளம்பெண்ணை அவர் கேட்டுக்கொண்டார். இதனால் திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண், சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அவரை தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.