வாலிபரை தாக்கி கார் கடத்தல்


வாலிபரை தாக்கி கார் கடத்தல்
x

தச்சம்பட்டில் வாலிபரை தாக்கி கார் கடத்தி சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை சேகரன் என்பவரின் மகன் நாதஸ்டிமுருகன் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான காரை வேலூருக்கு சென்று பிறகு மீண்டும் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.

தச்சம்பட்டு அருகே சென்றபோது அங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் நின்று இயற்கை உபாதையை கழிக்க இறங்கினார்.

அப்போது அவரது பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் திருவண்ணாமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர். அதற்கு நாதஸ்டிமுருகன் நீங்கள் வந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து திடீரென 4 பேரும் நாதஸ்டி முருகனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த காரை கடத்திச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story