மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி

மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் செவ் வாய்க்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கோவை கல்வீரம்பாளையம், விஜயநகரம் குடியிருப் போர் சங்கத்தினர் அளித்த மனுவில்,
எங்கள் பகுதியில் கடந்த 38 ஆண்டுகளாக சாக்கடை வடிகால் வசதியில்லை.
இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. காட்டுப்பன்றி, தெருநாய் தொல்லை உள்ளது. அதை கட்டுப்ப டுத்தி அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
நிலம் ஆக்கிரமிப்பு
குனியமுத்தூர் 93-வது வார்டை சேர்ந்த ஒரு அறக்கட்டளையின் நிர்வாகி தனபால் அளித்த மனுவில்,
எங்களது அறக்கட்டளைக்கு சொந்தமாக 1.99 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது.
எனவே எங்களது நிலத்தில் நடைபெறும் இந்த பணியை நிறுத்தி, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவை 33-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வக்கீல் ராஜேந்தி ரன் அளித்த மனுவில், கவுண்டம்பாளையம் பியூன்காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த பழமையான தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டு, மாநகராட்சி பணியா ளர் தங்கும் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
தற்போது அந்த இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட முயற்சி நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கட்டிட வரைபட அனுமதி
முகாமில், கட்டிடவரைபட அனுமதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பலரும் மனு அளித்தனர். கடந்த வாரம் கட்டிடவரைபட அனுமதி கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதி ஆணை வழங்கப்பட்டது.






