சாமியாரின் உருவபொம்மையை எரிக்க முயற்சி
சாமியாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர்
கோவை
சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக கூறி அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார் மிரட்டல் விடுத்தார். இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாமியார் மீது போலீசில் புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட ஆதிதமிழர் பேரவையினர் சாமியாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி உருவபொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story