ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்ய முயற்சி


ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்ய முயற்சி
x

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே ஊ.நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் அரிகோவிந்தன் (வயது 35). இவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் அரிகோவிந்தனுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அரிகோவிந்தன் பாச்சாபாளையம் கிராம எல்லை பகுதியில் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அங்கு நடந்து சென்றபோது, வயல் வரப்பு பகுதியில் கிடந்த மின்கம்பியை அரிகோவிந்தன் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் சிறிய காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அரிகோவிந்தனை கொலை செய்வதற்காக முத்துகருப்பன் அவரது சகோதரர்கள் ராஜேந்திரபாபு, விவசாயி ராஜசேகர் (42) ஆகியோா் ஒன்று சேர்ந்து மின்கம்பியை வயலில் போட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்ய நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story