இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் பக்கிரி மகன் பிரபு (வயது 36). அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண், அவரது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த பிரபு, அந்த வீட்டிற்குள் சென்று அங்கிருந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதி மக்கள் அங்கு வந்தபோது பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story