ஆந்திராவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 5 பெண்கள் கைது


ஆந்திராவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 5 பெண்கள் கைது
x

திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில், திருத்தணி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருத்தணி வழியாக செல்லக்கூடிய திருப்பதி மின்சார ரெயிலில் போலீசார் ஏறி சோதனை மேற்கொண்ட போது, 25 மூட்டைகள் கொண்ட 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருத்தணி பகுதியைச் சேர்ந்த விஜயா (வயது 45), செல்வி (50), அன்னியம்மா (55), தீபாஞ்சலி (45), கன்னியம்மாள் (60) ஆகிய 5 பெண்களை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story