ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி
x

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி செல்லும் மெயின் ரோட்டில் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதுடன், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர். இதனால் லட்சக்கணக்கான பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story