பொட்டல்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி


பொட்டல்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்புதூரில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் பொட்டல்புதூர் ஊராட்சியில் முத்தன் தெரு உள்ளது. இ்ங்கு சாலை, வாறுகால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் அம்பை-தென்காசி சாலையில் திரண்டு மறியலுக்கு முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தரப்பில், ஊராட்சியில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கும் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story