மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கோஷம்
மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரையில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் கூடினார்கள். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதையொட்டி ரெயில்நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சாலை மறியல்
அவர்கள் மறியலுக்கு வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து கட்சியினர் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 26 பெண்கள் உள்பட 112 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.