டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதி இரவு மதுபானங்கள் விற்ற தொகை ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 80-ஐ லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு கடையின் கதவை பூட்டிவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

மறுநாள் காலை 7 மணி அளவில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு டாஸ்மாக் கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

பணம் தப்பியது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு சென்று பார்த்துவிட்டு பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த பணம் அப்படியே இருந்தது. டாஸ்மாக் கடை கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் லாக்கரின் பூட்டை உடைக்க முடியவில்லை. மேலும், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டமும் இருந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story