கடை அடித்து நொறுக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சி


கடை அடித்து நொறுக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சி
x

கடை அடித்து நொறுக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சி செய்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 42). இவர் தழுதாழை டாஸ்மாக் கடை அருகே தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு இளையராஜா பெட்டிக்கடை வைத்து நடத்தக்கூடாது என சிலர் அவரது கடையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளையராஜா, அவரது மனைவி லதா மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த பிறகு இளையராஜாவிடம் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளையராஜாவின் மனைவி லதா அரளி விதையை (விஷ விதை) அரைத்து நேற்று குடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story