திருட முயற்சி


திருட முயற்சி
x

பூட்டிய வீட்டில் திருட முயற்சி

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் 22-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55). வீட்டில் இவர் மட்டும் வசித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டை பூட்டி விட்டு பரமசிவம் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் மர்ம நபர்கள் கேட் கதவு பூட்டை அறுத்துள்ளனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். இதை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டில் திருட முயன்றவர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story