பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 31 Aug 2023 3:30 AM IST (Updated: 31 Aug 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்றனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி வேலுமணி (வயது 51). இவர் ஆஸ்பத்திரி செல்வதற்கு அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இவர் நகையை இறுக்கி பிடித்துக் கொண்டதால், அவரை தள்ளி விட்டு விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.


இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story