வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் பிச்சை கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்வரி பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றார். அவர் சத்தம்போடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுதொடர்பாக ராஜேஸ்வரி நெல்லை சந்திப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story