பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் குருவப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி தனசெல்வி (வயது 75). இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தான் தனது மகளுடன் பாதிரிக்குப்பம் பகுதியில் வசிப்பதாகவும், புதுப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக வந்துள்ளதாகவும், உங்களுக்கு ஏதேனும் வாடகை வீடு இருப்பது தெரிந்தால் கூறுங்கள் என விசாரித்துள்ளார்.

அந்த சமயத்தில் தனசெல்வியின் கழுத்தில் கிடந்த நகையை, அந்த நபர் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அவரது மருமகன் சந்திரசேகரன் (47), அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த அன்பு என்கிற அன்பு செல்வன் (48) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செல்வனை கைது செய்தனர். பட்டப்பகலில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story