ரூ.4½ லட்சத்துக்கு எள், ஆமணக்கு ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.4½ லட்சத்துக்கு எள், ஆமணக்கு ஏலம் போனது.
எலச்சிபாளையம்
நாமக்கல் விற்பனைக் குழுவின் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆமணக்கு, நிலக்கடலை, பருப்பு, துவரை, தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. 1,586 கிலோ எள் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும், நிலக்கடலை பருப்பு 92 கிலோ ரூ.8 ஆயிரத்துக்கும், துவரை 216 கிலோ, ரூ.9 ஆயிரத்திற்கும், தேங்காய் பருப்பு 374 கிலோ, ரூ.26 ஆயிரத்திற்கும் வர்த்தகம் நடைபெற்றது. 2,802 கிலோ ஆமணக்கு, ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் வர்த்தகம் நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை, நிலக்கடலை பருப்பு, எள், உளுந்து, கொள்ளு, துவரை, ஆமணக்கு ஆகிய ஏலம் நடைபெறுகிறது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விளை பொருட்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு நாமக்கல் விற்பனை குழு செயலாளர் தர்மராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.






