ரூ.2 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்


ரூ.2 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
x

ரூ.2 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

திருப்பூர்

தளி

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 19 விவசாயிகள் 63 மூட்டை கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேங்காய் கொப்பரை ரூ. 66.21-க்கும் முதல் ரூ. 74.86-க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

-----------

1 More update

Related Tags :
Next Story