வரி நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்


வரி நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்
x

ராணிப்பேட்டையில் வரி நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

ராணிப்பேட்டை

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இணக்க கட்டணம் நிலுவைக்காக சிறைபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக பலமுறை நினைவூட்டு கடிதம் அனுப்பியும், வாகன உரிமையாளர்களால் விடுவிக்கப்படாமல் வாகனங்கள் உள்ளன. அதன்படி மோட்டார் சைக்கிள்கள் -9, ஆட்டோ -15, லோடு ஆட்டோ -9, கார் -7, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் -9, சுற்றுலா வாகனம் -2, கழிவுநீர் வாகனம் (டேங்கர்) -1, ஆம்புலன்ஸ் -1 ஆகிய 53 வாகனங்கள் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஏல விலை நிர்ணய குழுவினரால் ஏலம் விடப்படுகிறது.

ஏலம் விடப்படும் வாகனங்களின் பட்டியல்கள் மற்றும் ஏலம் தொடர்பாக அனைத்து வாகனங்களையும் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் ராணிப்பேட்டை போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பார்வையிடலாம். ஜி.எஸ்.டி. கணக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்..


Next Story