பயன்பாட்டில் இல்லாத போலீசாரின் வாகனங்கள் ஏலம்


பயன்பாட்டில் இல்லாத போலீசாரின் வாகனங்கள் ஏலம்
x
தினத்தந்தி 25 Jun 2023 10:00 AM IST (Updated: 25 Jun 2023 10:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பயன்பாட்டில் இல்லாத போலீசாரின் வாகனங்கள் ஏலம் 4-ந் தேதி நடக்கிறது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 12 கன ரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், 30 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 42 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதேநிலையில் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.

இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன பிரிவிலும், கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் புதுமந்து ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 3-ந் தேதி மாலை 5 மணி வரை இந்த வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 3-ந் தேதி அன்றே இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் கனரக, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் உட்பட முழு தொகையையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7502231971, மற்றும் 9786141247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story