ஆடி அமாவாசை திருவிழா: மதுரை-ராமேசுவரம் இடையே 28-ந் தேதி சிறப்பு ரெயில்


ஆடி அமாவாசை திருவிழா: மதுரை-ராமேசுவரம் இடையே 28-ந் தேதி சிறப்பு ரெயில்
x

ஆடி அமாவாசை விழாவையொட்டி மதுரை-ராமேசுவரம் இடையே வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசு வரத்துக்கு வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, மதுரை - ராமேசுவரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வ.எண்.06907) மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வ.எண்.06908) ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story