ஆடி கிருத்திகை விழா ஆலோசனை கூட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஏற்பாடுகள் குறித்து பல்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலமுருகன் அடிமை சுவாமிகள், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். செயல் அலுவலர் சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி ஆடி பரணி விழாவும், 9-ந்் தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மின் சாரம், தீயணைப்பு, போலீஸ், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் விழா நடைபெறும் இரண்டு நாட்களுக்கு அதிக பஸ் ஏற்பாடு செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கீழ் மின்னல் ஊராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.