ஆடி வெள்ளி திருமஞ்சன விழா


ஆடி வெள்ளி திருமஞ்சன விழா
x

வாலாஜா ஜல நாராயண பெருமாள் கோவிலில் ஆடி வெள்ளி திருமஞ்சன விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஜல நாராயண பெருமாள் கோவிலில் ஆடி வெள்ளி திருமஞ்சன விழா நடைபெற்றது. ஜலகுரு பழனி சுவாமி தலைமை தாங்கி, பெருமாளுக்கு திருமஞ்சனம், ஆராதனை, அபிஷேகம் செய்தார். விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில் மேற்கு வாசல் கோபுர திருப்பணிக்கு பக்தர்கள் வீட்டிற்கு ஒரு செங்கல் எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். மேலும் இக்கோவிலில் பெண்களுக்கு ஆடி மாதம் முடியும் வரை சனிக்கிழமைதோறும் திருமஞ்சன கயிறு வழங்கப்படும் என பழனி சுவாமிகள் தெரிவித்தார்.


Next Story