ஆட்டோ-கார் மோதல்


ஆட்டோ-கார் மோதல்
x

ஆட்டோ-கார் மோதல்

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள தொண்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் அதிகரை கிராமத்தில் சவாரி இறக்கிவிட்டு இளையான்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நகரகுடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாற்றுத்திறனாளி யின் மூன்று சக்கர வாகனம் சென்றபோது அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை சிறிது திருப்பினார். அந்த நேரத்தில் எதிரே வந்த ராமநாதபுரம் பசும்பொன் நகர் சேகர் மணிகண்டன் என்பவரது கார் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இது சம்பந்தமாக இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story