சாலையில் கிடந்த ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்


சாலையில் கிடந்த ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்
x

சாலையில் கிடந்த ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்தனர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அல்லா கோவில் அருகேயுள்ள வேகத்தடை முன்பு அறுந்த நிலையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர்கள் சந்திரசேகர், செல்வம் ஆகியோர் கண்டு, அந்த பையை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பையில், மேகநாதன், உகந்த நாயகன்குடிக்காடு என்ற பெயரிலான வங்கி கணக்கு புத்தகமும், பணமும், செல்போனும் இருந்தது.

இதற்கிடையே மேகநாதன், சைக்கிளில் சென்றபோது ஆடு விற்ற பணப்பை தொலைந்து விட்டதாக தெரிவித்த தகவலை தொடர்ந்து, செந்துறை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் பையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பணப்பையை ஒப்படைக்க ஆட்டோ டிரைவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிதுரை, பிரபாகரன் முன்னிலையில் அந்த பணப்பையை மேகநாதனிடம், சந்திரசேகர், செல்வம் ஆகியோர் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story