பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க தானியங்கி எந்திரம்


பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க தானியங்கி எந்திரம்
x

கரூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கம் செய்ய தானியங்கி எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

கரூர்

தானியங்கி எந்திரம்

கரூர் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கழிவுகளை நீக்கம் செய்ய ரூ.42 லட்சம் மதிப்பில் தானியங்கி புதைவடிகால் எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இதனை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தானியங்கி புதைவடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தில் ஸ்டேண்டு மற்றும் டிரோன் என்ற 2 யூனிட்டுகள் அமைந்துள்ளன. பாதாள சாக்கடைகளில் உள்ள கழிவுகள் மற்றும் தேவையற்ற மண்களை அள்ளுவதற்கும் அவற்றை சுத்தப்படுத்துவதற்கும் இந்த யூனிட்டுகள் பயன்படுகின்றன.

ஒருவார காலம் பயிற்சி

இந்த நவீன தானியங்கி எந்திரத்தின் ஸ்டேண்டு யூனிட்டில் ஒரு கண்காணிப்பு கேமராவும், டிரோன் யூனிட்டில் 3 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அறிந்து கொள்ளலாம். இந்த தானியங்கி எந்திரம் பாதாள சாக்கடையில் 8 மீட்டர் ஆழம் வரை சென்றும், 180 டிகிரி சுற்றளவிற்கு சென்றும் செயல்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த நவீன தானியங்கி புதைவடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தை இயக்குவதற்கு ஒருவார காலம் பயிற்சி அளிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும், இதன் மூலம் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறை குறையும் என்றும் கூறினார்.

1 More update

Next Story