பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் நிலையங்களில் ஆவடி கமிஷனர் ஆய்வு
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்
முதலில் பூந்தமல்லி போலீஸ் நிலையம் வந்த அவர், போலீஸ் நிலையத்தில் உள்ள வரவேற்பாளர், கைதிகள் அறை, போலீசார் வருகை பதிவேடு, குற்றங்கள் சம்பந்தமான ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண் போலீசாரிடம், எங்கிருந்து பணிக்கு வருகிறீர்கள்? எவ்வளவு தூரம் வருகிறீர்கள்? வீட்டில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திலும் ஆவடி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story